ADDED : நவ 01, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: தீபாவளியையொட்டி, பல்லடத்தில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் செல்லும் தொழிலாளர்கள், பஸ் கிடைக்காமல் அவதிப்படுவதும், மன உளைச்சலுக்கு ஆளாகி, ரோடு மறியலில் ஈடுபடுவதுமான சம்பவங்கள் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்ல திட்டமிட்ட தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை முதலே ஊருக்கு புறப்பட துவங்கினர்.
அடுத்தடுத்த நாட்களில் சொந்த ஊர் சென்றதால், பண்டிகைக்கு முந்தைய நாள், கூட்ட நெரிசல் இன்றி பஸ்கள் சென்றன. பஸ்களில் நெரிசல் ஏற்படும் என்பதால், எண்ணற்ற தொழிலாளர்கள், டூவீலர்களிலும், கார், வேன் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுத்தும் சொந்த ஊருக்கு சென்றனர். இதுவும், பஸ்களில் கூட்ட நெரிசல் குறைய காரணமானது.

