/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரிசெலுத்துவோர் விபரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம்
/
வரிசெலுத்துவோர் விபரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம்
வரிசெலுத்துவோர் விபரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம்
வரிசெலுத்துவோர் விபரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம்
ADDED : நவ 18, 2024 10:36 PM

உடுமலை; வரிசெலுத்துவோரின் விபரங்களை சரிபார்த்துக்கொள்ள, போடிபட்டி ஊராட்சி நிர்வாகம் வித்தியாசமான முறையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம மக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஊராட்சிகளில், வருவாய் இனங்களில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவை பிரதானமாக உள்ளன. இந்த வரி வருவாய் வாயிலாக, ரோடு பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வரி வசூலை தீவிரப்படுத்த துறை சார்பில், ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, ஊராட்சிகளும் வரிவசூலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், பொதுமக்களுக்கான குடிநீர், சொத்துவரி, தொழில்வரிகளை தாமதம் இல்லாமல் செலுத்துவதற்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்கள் வாயிலாக, பொதுமக்களும் வரிகளை எளிமையாக செலுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு வரிசெலுத்துவோரின் விபரங்களை சரிபார்த்துக்கொள்வதற்கும், ஊராட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் போடிபட்டி ஊராட்சியில் வித்தியாசமான வாசகத்துடன் வரிசெலுத்துவோர் விபரங்களை சரிபார்த்துக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'பாவம் நாங்க பலமுறை சொன்னோம்ங்க' என்ற தலைப்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்துவோர், வரிவிதிப்பு எண்களுடன் சரியான மொபைல் எண் இணைக்கப்பட்டுள்தை உறுதி செய்வதற்கும், மற்ற விபரங்கள் இணைய தள பதிவேற்றம் செய்வதற்கும், சரிபார்த்துக்கொள்வதற்கும் இறுதி வாய்ப்பாக நவ., 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
வரிசெலுத்துவோர் முகாமை பயன்படுத்தி விபரங்களை உறுதிசெய்வதற்கு, ஊராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.