/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு குழந்தைகள் கணக்கீட்டு முகாம்
/
சிறப்பு குழந்தைகள் கணக்கீட்டு முகாம்
ADDED : மார் 17, 2024 11:47 PM
உடுமலை;சக் ஷம் அமைப்பு சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மைய, சிறப்பு குழந்தைகளுக்கான உபகரணங்கள் கணக்கீட்டு முகாம் நடக்கிறது.
சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை கணக்கீடு செய்து, தேவையான உதவிகளை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு குழந்தைகளுக்கான முகாம் நடக்க உள்ளது.
நாளை (19ம் தேதி), சிறப்பு குழந்தைகளுக்கான உபகரணங்கள் கணக்கீட்டு முகாம், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம், மூலனுார், குண்டடம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.
சிறப்பு முகாம், எஸ்.எஸ்.ஏ., திட்ட குழந்தைகளுக்கானது. இருப்பினும், முகாம் நடக்கும் பகுதிகளை சேர்ந்த, செயற்கை உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 93630 32998, 94433 25500 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என, சக் ஷம் அமைப்பினர் தெரிவித்தனர்.

