/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை
/
சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை
ADDED : ஜன 01, 2026 05:38 AM
உடுமலை: மலையாண்டிபட்டணம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 349ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா மூன்று நாட்கள் நடைபெற்றது.
உடுமலை அருகே மலையாண்டிப்பட்டணத்தில், ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி,முதல் நாளில், ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரமும் நடந்தது. இரண்டாம் நாள் அம்மனுக்கு சிறப்பு பச்சை அலங்கார பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பொதுத்தேர்வில், சிறப்பிடம் பெற்ற, மாணவ, மாணவியருக்கு சிறப்பு கல்வி பரிசு வழங்கப்பட்டது. திண்டுக்கல் கலை குழுவினரின் முத்தாலம்மன் பக்தி நாடகம் நடந்தது. கோவில் நிர்வாகிகள் தங்கவேல், ஜனார்த்தனம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கோவிலில், ஜன.,3ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.

