/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
26ம் தேதி சிறப்பு கல்வி கடன் முகாம்
/
26ம் தேதி சிறப்பு கல்வி கடன் முகாம்
ADDED : நவ 22, 2025 05:55 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, அறை எண்: 20ல், வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடைபெறும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கி அலுவலர்கள் பங்கேற்று, மாணவர்களிடமிருந்து கல்விக்கடன் விண்ணப்பங்களை பெறுகின்றனர்.
கடன் முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், https://pmvidyalaxmi.co.in/ என்கிற தளத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிண் ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களுடன், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படங்கள், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதி சான்று, பான் கார்டு, ஆதார் கார்டு நகல், கல்வி கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் இளநிலை பட்ட படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரி எனில், அதற்கான ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.
முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கியை, 0421 2971185 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

