/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் மாணவர்களின் சிறப்பு இந்நாள் மாணவர்களுக்கு ஊக்கம்
/
முன்னாள் மாணவர்களின் சிறப்பு இந்நாள் மாணவர்களுக்கு ஊக்கம்
முன்னாள் மாணவர்களின் சிறப்பு இந்நாள் மாணவர்களுக்கு ஊக்கம்
முன்னாள் மாணவர்களின் சிறப்பு இந்நாள் மாணவர்களுக்கு ஊக்கம்
ADDED : பிப் 02, 2025 01:11 AM

முன்னாள் மாணவர்களின் சிறப்புகளை நேரடியாக அறியும்போது ஆசிரியப் பெருமக்களுக்கு எப்போதுமே மகிழ்ச்சி. இதற்கான வாய்ப்பு அரிதாகத்தான் கிடைக்கிறது.
குடியரசு தின நாளில், பொங்குபாளையம், ஸ்ரீபுரம் சக்தி விக்னேஸ்வரா பள்ளியில் கடந்த, 2002 - 2020ம் கல்வியாண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்களில், 400 பேர் பங்கேற்றனர். பள்ளிப்பருவ அனுபவத்தை பகிர்ந்து, பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
'முன்னாள் மாணவர்களை, பள்ளி வளர்ச்சி சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, அழைப்பு விடுத்தோம். வெளிநாடுகளில் வேலை, டாக்டர், தொழிலதிபர் என, ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் உயர்ந்திருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருந்தது. ஐ.டி., துறை, அறிவியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல துறைகளில் 'அப்டேட்' ஆக உள்ளனர். வெளியுலகில் நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
சாதாரண, நடுத்தர குடும்ப குழந்தைகள் படிக்கும் எங்கள் பள்ளியில், பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்வி செல்ல இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதாக, முன்னாள் மாணவர்கள் கூறினர். 'கற்க கசடற' என்ற குறள் தான் நினைவுக்கு வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது'' என்று பெருமிதம் கொண்டார் பள்ளி முதல்வர் சக்தி வேலுசாமி.
சிறப்பு விருந்தினராக, அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்லுாரி பேராசிரியர் அமிர்தா குமார் பங்கேற்றார். பள்ளி தாளாளர் மைலாவதி, துணை முதல்வர் யமுனாதேவி, தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆலோசகர் தேவராஜன் என பலரும் பங்கேற்று முன்னாள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.