/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு மருத்துவ முகாம்; 93 பேர் பதிவு
/
சிறப்பு மருத்துவ முகாம்; 93 பேர் பதிவு
ADDED : நவ 29, 2024 12:20 AM

உடுமலை; உடுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தமிழக அரசு 'மக்களை தேடி மருத்துவ முகாம்' என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், உடுமலை நகராட்சி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.
இதில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஞ்சனா தலைமையில், மருத்துவ குழுவினர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், 93 பேர் பதிவு செய்யப்பட்டனர்.
இம்முகாமில், தில்லை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.