
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை ருத்தரப்ப நகர் சித்தி விநாயகர், விசாலாட்சி அம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் கோவிலில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டிதேர்வு எழுதுவோருக்கான சிறப்பு ேஹாமம் நடந்தது.
லட்சுமி ஹயக்ரீவர், ஞான மகாசரஸ்வதி, யோகமேதா தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாட்டுடன் ேஹாமம் காலை, 9:30 மணிக்கு துவங்கியது. ேஹாமத்தில் பள்ளி மாணவர்கள், போட்டித்தேர்வர்கள் உட்பட 175 பேர் பங்கேற்றனர்.

