/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வழியாக சிறப்பு பார்சல் ரயில்: ஒரு கிலோ சரக்கு கூட 'புக்கிங்' இல்லை
/
திருப்பூர் வழியாக சிறப்பு பார்சல் ரயில்: ஒரு கிலோ சரக்கு கூட 'புக்கிங்' இல்லை
திருப்பூர் வழியாக சிறப்பு பார்சல் ரயில்: ஒரு கிலோ சரக்கு கூட 'புக்கிங்' இல்லை
திருப்பூர் வழியாக சிறப்பு பார்சல் ரயில்: ஒரு கிலோ சரக்கு கூட 'புக்கிங்' இல்லை
ADDED : டிச 14, 2025 07:39 AM
திருப்பூர்: சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சரக்கு அனுப்பி வைப்போர், அதிகளவில் சரக்கு முன்பதிவு செய்ய ஏதுவாக, மங்களூரு - ராயபுரம் (சென்னை) இடையே சிறப்பு பிரத்யேக சரக்கு ரயில் (எண்:00652) தெற்கு ரயில்வே அறிவித்தது.
திருப்பூரிலுள்ள பின்னலாடைதொழில்துறையினர் அறிந்து கொள்ளும் வகையிலான அறிவிப்பு, விழிப்புணர்வு வெளியிடப்படவில்லை. இதுதவிர, வழக்கமாக சரக்குகளை அனுப்புவோரை அணுகி, இது குறித்த விரிவான விபரங்களை தெரிவிக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை 3:10 மணிக்கு மங்களூருவில் புறப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் (எண்:00652) நேற்று அதிகாலை 4:16 மணிக்கு திருப்பூர் வந்தது. ஐந்து நிமிடத்துக்கு பின், 4:21 மணிக்கு புறப்பட்டது.
சிறப்பு ரயில் குறித்து சரக்கு முன்பதிவு மைய பொறுப்பாளர்களிடம் கேட்ட போது,' பிரத்யேக சரக்கு ரயிலில் புக்கிங் எதுவுமில்லை,' என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி முடித்து விட்டனர். ரயில் இயக்கம், திருப்பூர் வந்து செல்லும் நேரம் குறித்த, போதிய, விரிவான அறிவிப்பு வெளியிடப்படாததால், திருப்பூர் ஸ்டேஷனில் இருந்து ஒரு கிலோ சரக்கு கூட முன்பதிவாகவில்லை.
வழக்கமாக ரயில்களில் சரக்குகளை அனுப்ப முன்பதிவுக்கு, கிலோவுக்கு மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், பிரத்யேக சரக்கு ரயிலுக்கு பாதி கட்டணம் (கிலோவுக்கு, 1.50 ரூபாய் தான்) என அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டது.
ஆனால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வணிக பிரிவு அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால், திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் தலா ஐந்து நிமிடம் சிறப்பு சரக்கு ரயில் நின்று புறப்பட்டும், குறைந்த பட்ச அளவு கூட சரக்கு முன்பதிவு ஆகவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.

