/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சைனிக் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி
/
சைனிக் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 20, 2025 10:24 PM

உடுமலை; உடுமலை சைனிக் பள்ளியில் 'பிரஜன்னா' என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் 'பிரஜன்னா' என்ற தலைப்பில் மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடந்தது.
பேச்சு, கட்டுரை, ஓவியம், குறும்படம், வினா-விடை உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 310 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர். மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.