/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்; விண்ணப்பதாரர் கள ஆய்வு தாமதம்
/
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்; விண்ணப்பதாரர் கள ஆய்வு தாமதம்
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்; விண்ணப்பதாரர் கள ஆய்வு தாமதம்
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்; விண்ணப்பதாரர் கள ஆய்வு தாமதம்
ADDED : பிப் 08, 2025 06:30 AM
திருப்பூர்; சமூக நலத்துறை வாயிலாக, பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், கலப்பு திருமண உதவித்தொகை, விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு திட்டத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒவ்வொன்றிலும் ஒரு மாதத்தில் மட்டும் ஐநுாறுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இவற்றில் தகுதி உள்ளவைகளை பிரித்து, அந்த விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து கள ஆய்வு நடத்தி, மாவட்ட நிர்வாகத்துக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை பணியாளர்கள் வாயிலாக பட்டியல் அனுப்பப்படுகிறது.
பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கும் இத்துறைக்கென, ஊராட்சி ஒன்றிய அளவில் கம்ப்யூட்டர் வசதி இதுவரை செயல்படுத்தபடவில்லை. திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்த கோப்புகளையும், பதிவேடுகளையும், பராமரிப்பதற்கு பணியாளர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
பயனாளிகளின் விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதற்கான வசதி இல்லாததால், இ--சேவை மையங்களை தேடி செல்கின்றனர். அதேபோல், பணியாளர்களும், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, கம்ப்யூட்டர் தேவையாக உள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் பொதுவான பயன்பாட்டுக்கென இருப்பதால், அதிக நேரம் அவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. பயனாளிகள் குறித்து அலுவலர்கள் கள ஆய்வு நடத்துவது தாமதமாகிறது.
பல்வேறு திட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுவதை, பல பதிவேடுகளில் குறிப்பிடுகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, சமூக நலத்துறைக்கென ஒன்றிய அலுவலகங்களில், கம்ப்யூட்டர் வசதி கட்டாயத்தேவையாக மாறியுள்ளது.
அரசின் சார்பில், இத்துறை பணியாளர்களுக்கு, கம்ப்யூட்டர் வசதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
சமூக நலத்துறை திட்டங்களை மக்களிடம் எளிதில் கொண்டு செல்லவும், மன உளைச்சல் இல்லாமல் பணி செய்யவும், விரைவில், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டுமென, சமூக நலத்துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.