/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பள்ளி குழந்தைகள் கொடிவேரி அணைக்கு சுற்றுலா
/
சிறப்பு பள்ளி குழந்தைகள் கொடிவேரி அணைக்கு சுற்றுலா
சிறப்பு பள்ளி குழந்தைகள் கொடிவேரி அணைக்கு சுற்றுலா
சிறப்பு பள்ளி குழந்தைகள் கொடிவேரி அணைக்கு சுற்றுலா
ADDED : ஏப் 15, 2025 11:53 PM

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகள், கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், குழந்தைகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். சுற்றுலாத்துறையுடன் இணைந்து, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, மாற்றுத்திறன் குழந்தைகள், சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அவ்வகையில், பாரதி வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர், நேற்று கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், குழந்தைகளுக்கு ரோஜா பூக்களை வழங்கி, சுற்றுலா வழியனுப்பி வைத்தார். பாரதி வித்யாஸ்ரம் பள்ளியில் பயிலும், 20 மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள், ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள, கொடிவேரி அணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேனில் சுற்றுலா அழைத்துச்சென்றதால், மாற்றுத்திறன் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன், புறப்பட்டு சென்றனர்.