/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்புப்பள்ளி மாணவர்கள் அபார சாதனை
/
சிறப்புப்பள்ளி மாணவர்கள் அபார சாதனை
ADDED : ஆக 03, 2025 09:59 PM

திருப்பூர்; திருப்பூரைச் சேர்ந்த சிறப்புப்பள்ளி மாணவ, மாணவியர், தேசிய விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
பெருமாநல்லுார் மற்றும் காந்தி நகரில், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சாய் கிருபா சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் சிறப்பு குழந்தைகள், ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் சார்பில் நடந்த தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதித்துள்ளனர்.
வசந்தகுமார், 19 கடந்த மாதம் சண்டிகரில் நடந்த டேபிள் டென்னிஸ், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம்; கோகிலா, 25 பெண்களுக்கான மூத்தோர் பிரிவு 'பவுச்சி' எனப்படும் விளையாட்டில், வெண் கலப்பதக்கம் வென்றனர்.
ஸ்ரீஹரி, 19 ஓட்டம், குண்டு எறிதல், கால்பந்து விளையாட்டில் திறன் காட்டினார். மதுரையில் நடந்த போட்டியில் தேர்வான இவர், வரும் 22ல் துவங்கி 26ம் தேதி வரை, கோல்கட்டாவில் நடைபெற உள்ள, தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட உள்ளார்.
ஜூடோ வீராங்கனையான ஸ்ரீமதி, 22 வரும் அக்டோபர் மாதம், கர்நாடகாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டியில், பெண்கள் மூத்தோர் பிரிவில், தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளார்.