தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிலாளர் பயிற்சிக்கு சிறப்பு திறன் மையங்கள்

தொழிலாளர் பயிற்சிக்கு சிறப்பு திறன் மையங்கள்

தொழிலாளர் பயிற்சிக்கு சிறப்பு திறன் மையங்கள்


UPDATED : அக் 09, 2026 10:32 PM

ADDED : அக் 09, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 10:32 PM ADDED : அக் 09, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழில் அமைப்புகள் பயிற்சி மையங்கள் சிறப்பு திறன் மையங்களாக மேம்படுத்தப்படும் என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை கூடுதல் செயலர் நிரஞ்சன்குமார் சுதான்ஷூ பேசினார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை கூடுதல் செயலர் நிரஞ்சன்குமார் சுதான்ஷூ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று கலந்துரையாடினார்.

ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் இளங்கோவன் வரவேற்று பேசுகையில், 'திருப்பூர் பின்னலாடை தொழில்துறை 10 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இத்தொழில் வளர்ச்சிக்கு மனிதவளம் முக்கியமானது. தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப திறன் பயிற்சி, தொழில் பழகுனர் பயிற்சி, நவீன தொழில்நுட்ப மேம்பாடு அவசியம். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்' என்றார்.

மத்திய கூடுதல் செயலர் நிரஞ்சன்குமார் சுதான்ஷூ பேசியதாவது:

தொழில் பழகுனர்களுக்கு இ.எஸ்.ஐ., - பி.எப். தொடர்பான சர்வதேச வர்த்தகர்களின் கோரிக்கைகள் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேசிய தொழில் பழகுனர் மேம்பாட்டு திட்டம் மற்றும் பயிற்சி திட்டங்கள் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக் மற்றும் தொழில் அமைப்புகள் பயிற்சி மையங்களை சிறப்பு திறன் மையங்களாக மேம்படுத்தப்படும். பயிற்சியாளர்களை நிறுவனங்கள் டிஜிட்டல் தளத்தில் அணுகவும் வசதி ஏற்படுத்தப்படும்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள ஏதுவாக ஏற்றுமதியாளர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் வாயிலாக பயிற்சி அளிக்க திட்டமிடப்படும். நிர்வாக பணிகளை எளிமைப்படுத்தும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பு முகமைகள் முறையும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். வெற்றியடைந்தால் தொழில் குழுமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார்துரைசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள், இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் துணை இயக்குனர் அகான்ஷா, வேலை வாய்ப்பு பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் வேல்முருகன் பங்கேற்றனர்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை கூடுதல் செயலர் நிரஞ்சன்குமார் சுதான்ஷூ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று கலந்துரையாடினார். ஏற்றுமதியாளர் சங்க கவுரவத் தலைவர் சக்திவேல், தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கறே்றனர்.

புதிய வர்த்தக ஒப்பந்த வாய்ப்பு


மத்திய அமைச்சகம் உதவுமா?
ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், 'திருப்பூர் பின்னலாடை தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது. வெளிமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நேப்ஸ் திட்டத்தை செயல்படுத்த தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். தொழிலாளர் தங்குமிட வசதிக்கு 50 சதவீதம் மானியமும், மீதி தொகை வங்கி கடனாக வழங்க வேண்டும். புதிய வர்த்தக ஒப்பந்த வாய்ப்புகளை பயன்படுத்த மத்திய அரசு திறன் மேம்பாட்டு அமைச்சகம் உதவ வேண்டும்' என்றார்.
தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், 'கடந்த நிதியாண்டில் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான உற்பத்தியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமானது. சமர்த் திட்டத்தில் இதுவரை 19,050 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 96 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள்' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us