/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'திறன்' மேம்பாட்டு சிறப்பு பயிற்சி
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'திறன்' மேம்பாட்டு சிறப்பு பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'திறன்' மேம்பாட்டு சிறப்பு பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'திறன்' மேம்பாட்டு சிறப்பு பயிற்சி
ADDED : ஜூலை 08, 2025 08:47 PM
உடுமலை; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடிப்படை மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த 'திறன்' பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு நடுநிலை முதல் மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடிப்படை மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிற்சி கட்டகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதைக்கொண்டு, மொழிப்பாடங்கள் மற்றும் கணிதத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, 6 ஆறு மாத காலம் ' திறன்' மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயிற்சி அளிப்பதற்கு, வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு, 40 சதவீத மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
தமிழ் ஆங்கிலத்தில், எழுத்துகளை கண்டறிதல், சொற்களை கண்டறிதல், ஒரு தொடரை வாசிப்பதில் உள்ள இடர்பாடுகள், வாய்ப்பாடுகள் கூறுதல், கூட்டல், பெருக்கல் கணக்குகளில் பிரச்னை உள்ள மாணவர்களை மதிப்பீடு வாயிலாக, கண்டறிய வேண்டும்.
அதன்பின் அவர்களுக்கான ஆறு மாத கால 'திறன்' மேம்பாட்டு சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்குகிறது. ஜூலை இறுதி முதல் இப்பயிற்சி துவக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் அதற்கான மதிப்பீடு நடக்கிறது. ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களை மதீப்பீடு செய்கின்றனர்.