ADDED : செப் 21, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
போத்தனுார், திருப்பூர் வழியாக ஹைதராபாத்-கொல்லம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இயக்கப்படும் ரயில் (07193), அக்.3 முதல் நவ. 28 வரையும், திங்கட்கிழமை இயக்கப்படும் ரயில் (07194), அக். 5 முதல் நவ.30 வரையும் தொடர்ந்து இயக்கப்படும். இரு ரயில்களின் சேவையும் தலா 9 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
