sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 

/

ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 

ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 

ஆன்மிக நகரங்களை இணைக்க சிறப்பு ரயில் 


ADDED : ஜூலை 11, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வாரந்தோறும், புதன்கிழமை, மாலை 5:20 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07230) வியாழன் காலை, 7:30 மணிக்கு திருப்பதி செல்லும். மதியம் 12:40 மணிக்கு திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக மாலை 3:25 மணிக்கு சிதம்பரம் சென்றடைந்து, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக இரவு, 9:45 மணிக்கு மதுரைக்கு செல்லும்.

மூன்றாவது நாள் (வெள்ளி) திருநெல்வேலி வழியாக சென்று, அதிகாலை, 2:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, வெள்ளியன்று அதிகாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:07229) சனிக்கிழமை மதியம், 2:30 மணிக்கு ைஹதராபாத் சென்றடையும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,' திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரையை இணைக்க இதுவரை ரயில்கள் இருந்தாலும், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இயங்க குறைவாக ரயில்கள் உள்ளது. இந்த சிறப்பு ரயில் வாயிலாக திருப்பதி - திருவண்ணாமலை - சிதம்பரம் - தஞ்சாவூர் -மதுரை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதை பொறுத்து, ரயில் இயக்கம் நீட்டிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us