/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா பிரசாந்தி நிலையம் செல்ல சிறப்பு ரயில்
/
ஸ்ரீ சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா பிரசாந்தி நிலையம் செல்ல சிறப்பு ரயில்
ஸ்ரீ சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா பிரசாந்தி நிலையம் செல்ல சிறப்பு ரயில்
ஸ்ரீ சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா பிரசாந்தி நிலையம் செல்ல சிறப்பு ரயில்
ADDED : அக் 26, 2025 03:05 AM
ஸ் ரீ சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா, நவ. 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர், புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்துக்கு பலரும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
பல்வேறு பகுதியில் இருந்து ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் செல்வோர் வசதிக்காக, திருவனந்தபுரம் வடக்கு - - ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், நவ. 19 மற்றும் 21ம் தேதி சிறப்பு ரயில் (எண்:06093) மாலை 6:05 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை, 11:00 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் சென்று சேரும். நவ. 20 மற்றும், 22ம் தேதி, அதிகாலை, 3:20 மணிக்கு சிறப்பு ரயில் திருப்பூர் வந்து, 3:22 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கமாக, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் - திருவனந்தபுரம் வடக்கு இடையே நவ. 20 மற்றும் 22ம் தேதி சிறப்பு ரயில் (எண்:06094) இயங்கும்.
இரவு, 9:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள், மதியம் 3:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ஸ்டேஷன் சென்று சேரும். நவ. 21 மற்றும், 23 ம் தேதி, காலை 6:10 மணிக்கு சிறப்பு ரயில் திருப்பூர் வரும். இவ்விரு இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, இன்று (26ம் தேதி) துவங்குகிறது.
இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

