நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூரில் கடந்த, 11ம் தேதி துவங்கிய மழை, 14, 15ம் தேதி வெளுத்து வாங்கினாலும், நேற்று முன்தினம் ஓய்ந்தது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொடர் மழை முன்னெச்சரிக்கையாக, 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்ட நிலையில், யாரும் உள்நோயாளிகளாக அனுமதியாகவில்லை.
அதே நேரம், கடந்த வாரத்தை விட, சாதாரண காய்ச்சல், இருமல், சளி, உடல்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறும் இவர்களுக்கு, ஊசி போடப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு வார்டுகளில் யாரும் அனுமதியாகாததால், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.