/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தைப்பூச விழா கொண்டாட்டம்; கும்மியடித்து சிறப்பு வழிபாடு
/
தைப்பூச விழா கொண்டாட்டம்; கும்மியடித்து சிறப்பு வழிபாடு
தைப்பூச விழா கொண்டாட்டம்; கும்மியடித்து சிறப்பு வழிபாடு
தைப்பூச விழா கொண்டாட்டம்; கும்மியடித்து சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 15, 2025 06:47 AM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், தைப்பூசத்தையொட்டி குடியிருப்புகளில் பெண்கள் கும்மியடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தைமாதம் பவுர்ணமி நாள் பூசம் நட்சத்திரத்தையொட்டி, முருகனுக்கு விசேஷமாக கொண்டாடப்படுவதுடன், கிராமங்களில் பொதுவான இடங்களில் தரையில் தேர் வரைந்து, பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து வழிபடுகின்றனர்.
உடுமலை சரவணா கார்டன் மற்றும் ஆர்.வி., நகர் பகுதியில் பெண்கள், குழந்தைகள் ஒன்றாக இணைந்து கோலமிட்டு, மாலையில் கும்மிப்பாட்டு பாடி, கும்மியடித்து வழிபட்டனர்.
தாங்கள் கொண்டுவந்த உணவுகளை பரிமாறியும், குழந்தைகளுக்கு சிறிய போட்டிகள் நடத்தப்பட்டும் மூன்று நாட்கள் கோலாகலமாய் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.
அதேபோல், கணக்கம்பாளையம் எஸ்.வி., புரம் பகுதியிலும் வீதியில் தேர் கோலமிட்டு, பெண்கள், குழந்தைகள் இணைந்து கும்மியடித்து கொண்டாடினர்.