/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யுனிடெக்ஸ்' நிட்டிங் மெஷின்கள் தனிச்சிறப்பு
/
'யுனிடெக்ஸ்' நிட்டிங் மெஷின்கள் தனிச்சிறப்பு
ADDED : மார் 02, 2024 01:18 AM

சிங்கப்பூரை சேர்ந்த இந்நிறுவனம் சார்பில், 'யுனி டெக்ஸ்' நிட்டிங் மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன. 'யுனிடெக்ஸ்' நிட்டிங் இயந்திரங்களுக்கு, நாடு முழுவதும் டீலராக இருக்கிறது, 'நிட் - பேப்' நிறுவனம். ஆசிய அளவில், அதிக எண்ணிக்கையிலான நிட்டிங் மெஷின்கள் உற்பத்தி செய்வதில், 'யுனிடெக்ஸ்' முன்னிலை வகிக்கிறது.
தொழில் வளர்ச்சி நிலையை பொறுத்து, புதிய தொழில்நுட்பத்தை இணைத்து, புதிய மெஷின் வடிவமைக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு, 1,500 நிட்டிங் மெஷின்களை தயாரித்து கொடுக்கிறது. 'ஆக்டிவ்' ஆடைகள் தயாரிப்புக்கான துணிகளை உற்பத்தி செய்ய ஏதுவாக, திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள், 'யுனிடெக்ஸ்' நிட்டிங் மெஷின் வாங்குகின்றன.
இதுகுறித்து, 'நிட்பேப்' நிர்வாக இயக்குனர் பிரேம்குமார், 'யுனிடெக்ஸ்', நிர்வாக இயக்குனர் பென்னி புவா, இயக்குனர் டியோ பூன் சியோ ஆகியோர் கூறியதாவது:
திருப்பூரில் உள்ள, 'காட்டன் பிளாசம்' நிறுவனம், இவ்வகை நிட்டிங் மெஷின்களை வாங்கி, இன்றும் புதிய மெஷின் போல் பயன்படுத்தி வருகிறது. பருத்தி நுாலிழை துணி உற்பத்திக்கு மட்டுமல்ல, செயற்கை நுாலிழை துணி உற்பத்திக்கும், இவ்வகை நிட்டிங் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.
குளிர்கால ஆடை தயாரிப்புக்கான, துணிகளை, எங்களது நிட்டிங் மெஷினில் நேர்த்தியாக உற்பத்தி செய்யலாம்.

