ADDED : டிச 11, 2025 04:50 AM
திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை அறிக்கை:
காந்தி, நேரு பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் மாணவர்களைத் தேர்வு செய்து, அறை எண்: 608, தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, 2026 ஜன. 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காந்தி குறித்த பேச்சுப்போட்டி ஜன. 6ம் தேதியும், நேரு குறித்த பேச்சுப்போட்டி, 7ம் தேதியும் நடைபெறும்.
கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே 5,000; 3000; 2000 ரூபாய் வழங்கப்படும். பள்ளி அளவில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு சிறப்பு பரிசுத்தொகை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

