/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடை அகற்றம்; விபத்து அபாயம்
/
வேகத்தடை அகற்றம்; விபத்து அபாயம்
ADDED : ஆக 02, 2025 11:30 PM

பல்லடம்: கடந்த மாதம், முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, முதல்வர் வருகையை முன்னிட்டு, நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில், பல்லடம்- - உடுமலை ரோடு, கேத்தனுார் நால் ரோட்டில் இருந்த வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: கேத்தனுாரில் உள்ள அரசு துவக்க, மேல்நிலைப் பள்ளிகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ்களில் இறங்கி பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நால் ரோட்டை கடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு இப்பகுதியில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வேகத்தடைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்வதால், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும். வேகத்தை கட்டுப்படுத்த, தற்காலிகமாக, தடுப்புகளையாவது வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.