/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் கட்டணம் தள்ளுபடி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் கட்டணம் தள்ளுபடி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் கட்டணம் தள்ளுபடி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஸ்பீடு போஸ்ட் கட்டணம் தள்ளுபடி
ADDED : அக் 30, 2025 12:38 AM
திருப்பூர்: நாடு முழுதும், 1.56 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. தபால் மற்றும் பார்சல்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நாடு முழுதும் பகிர்வதில் தபால்துறை முக்கிய பங்காற்றுகிறது.
தந்தி, பதிவு தபால் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், தபால் அலுவலகங்களை நாடி வரும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் தேர்வுகளுக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தபால்துறை வாயிலாக அனுப்பும் ஸ்பீடு போஸ்ட்களை(விரைவு தபால்), 'ஸ்டாண்ட் மெயில்' என தனியே பிரித்து, அவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில், ஐந்து முதல் பத்து சதவீதம் வரை தபால்துறை சலுகை வழங்க உள்ளது.
தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ''நாடு முழுதும் அனைத்து மாநிலங்களுக்கும் எளிதில் ஸ்பீடு போஸ்ட்அனுப்பும் வசதிகள் இருந்தும், பலர் பயன்படுத்தாமல் உள்ளனர்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது, பல்கலை களுக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு கூட தனியார் சேவையை நாடுகின்றனர். இவர்களை தபால்துறை பக்கம் ஈர்க்க இந்த அறிவிப்பு வெளியாகிறது'' என்றனர்.

