/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அதி வேகம் உயிரை கொல்லும்' எமன் வேடமிட்டு விழிப்புணர்வு
/
'அதி வேகம் உயிரை கொல்லும்' எமன் வேடமிட்டு விழிப்புணர்வு
'அதி வேகம் உயிரை கொல்லும்' எமன் வேடமிட்டு விழிப்புணர்வு
'அதி வேகம் உயிரை கொல்லும்' எமன் வேடமிட்டு விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 11:34 PM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மற்றும் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து, புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள தேவாங்கபுரம் அரசு பள்ளி முன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் பேசுகையில், 'டூவீலர் ஓட்டுவோர் கட்டாயம் ெஹல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். அதிவேக பயணம் தவிர்க்க வேண்டும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட பிள்ளைகளை அனுமதிக்க கூடாது,'' என்றார்.
பின், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி, அதனால், ஏற்படும் விபத்து குறித்து மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். எமன் போன்று வேடமணிந்து, துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.