/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
108 மஹா யாகத்துடன் ஆன்மிக எழுச்சி மாநாடு
/
108 மஹா யாகத்துடன் ஆன்மிக எழுச்சி மாநாடு
ADDED : ஜன 29, 2025 03:46 AM

திருப்பூர்; திருச்சி ஓம் அகத்தியர் ஆதீனம் சார்பில், ஓம் ஆதிசர்வ சித்தர்கள் மாநாடு, சனாதன தர்ம ஆன்மிக எழுச்சி மாநாடு, உலக நலன் வேண்டி 108 மகா யாகவேள்வி, அஸ்வமேத ராஜ சூர்யா மகா வேள்வி விழா, திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் இரண்டு நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம், கணபதி ேஹாமத்துடன் மாநாடு துவங்கியது. அஸ்வமேத ராஜசூரிய பூஜை, சிவபுராணம், திருவாசகம், திருமுறை விண்ணப்பம்; சித்தர்கள் வாழ்க்கை முறை விளக்கம், ஆன்மிக எழுச்சி உரை, அபிேஷக பூஜைகள், 108 மகாவேள்வி பூஜைகள் நடந்தன. விழாவுக்கு, திருச்சி அகத்தியர் ஆதீனம், சிவகுரு கங்கா புத்திரன் மதியழகன் சுவாமிகள் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, திருப்பூர் மஹாலட்சுமி சுவாமிகள் பங்கேற்றார். திண்டுக்கல் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று, இறைபணி சான்றிதழ் வழங்கினர்.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், திருமுறை விண்ணப்பம், சித்த மருத்துவ விளக்கவுரை, மடாதிபதிகள் ஆசியுரை, மகேஸ்வர பூஜை எனும் அன்னதான விழா நடந்தது. நிறைவாக, அகத்தியர் 18 சித்தர் ஆன்மிக பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

