/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு
/
நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஆக 03, 2025 08:49 PM
உடுமலை; உடுமலையில், நாமத்வார் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
உடுமலையிலுள்ள ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, காட் அமைப்பின் சார்பில், நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமத்வார் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (4ம் தேதி) மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை, உடுமலை காந்திநகர் விநாயகர் கோவில் அருகிலுள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ சுந்தர காண்டம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் நிகழ்த்துகிறார். அதே போல், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.
இந்த நாம வேள்வியில் பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ ராமர் அருள் பெற, உடுமலை நாமத்வார் மையத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.

