/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் :கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்
/
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் :கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் :கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் :கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்
ADDED : நவ 16, 2025 12:35 AM

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து இந்தாண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, திருப்பூர், பி.என். ரோட்டில் செயல்படும் ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கல்வி மற்றும் ஆன்மிக கண்காட்சி மாணவர்களின் படைப்புகளை காட்சிப் படுத்தும் வகையில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் 800 பேரும் 50 ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் கண்காட்சியை ஏற்பாடு செய்து அரங்குகளை அமைத்திருந்தனர்.
பொதுவாக அறிவியல், கல்வி கண்காட்சி என்பது மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
இக்கண்காட்சி கல்வி மட்டுமின்றி ஆன்மிகத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் மாணவர்களின் படைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியின் நோக்கமானது, நற்பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், நேர்மை, அன்பு, பரிவு, இரக்கம், பிறருக்கு உதவி செய்தல் மற்றும் இயற்கை பாதுகாப்பு ஆகியன குறித்த தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இச் சமூகத்துக்கும் உணர்த்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பாடவாரியாகவும், அணி வாரியாகவும் கண்காட்சியில் படைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியின் அனைவரையும் கவரும் வகையில், 'சர்வதர்ம ஸ்துாபம் சுவாமி ஸ்ரீசத்யசாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு' குறித்த படைப்பு அமைந்திருந்தது. சாய்பாபாவின் கோட்பாடுகள் அவரின் உன்னதமான சேவைகளை எடுத்துரைக்கும் வண்ணம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் கழகம் சார்பாக பல பயனுள்ள தகவல்களை, சுற்றுச் சூழல் பாதிக்கும் நிலை, அதை பாதுகாக்கும் நடைமுறைகளும் அதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.
ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம், சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, 'தெய்வீக தியான அறை', மூவேந்தர்களின் செயல் பாடுகள், தானியங்கி முறையில் நுண்ணறிவு செயல் விளக்கம், ஸ்ரீரங்கம், அயோத்தி ராமர் கோவில் போன்ற சிறப்புமிக்க கோவிலின் மாதிரிகளை அமைத்து, கட்டட கலைகள் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்து மாணவர்கள் விளக்கினர்.

