/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு
/
சாலையோர மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு
ADDED : நவ 16, 2025 12:34 AM

திருப்பூர்: திருப்பூர் --- தாராபுரம் ரோட்டில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
திருப்பூர் - -- தாராபுரம் ரோடு, புதுார் பிரிவில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் முன்புறம் நன்கு உயரமாக வளர்ந்த மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த மரங்கள் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இங்கிருந்து இரண்டு மரங்கள் அடுத்தடுத்து வேரோடு வெட்டி அகற்றப்பட்டது. வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களை அதே இடத்தில் துண்டுகளாக்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இது குறித்து தெற்கு தாசில்தார் சரவணனிடம் கேட்ட போது, 'இது குறித்து அலுவலர்களை அனுப்பி நேரில் ஆய்வு செய்து விசாரிக்கப்படும்' என்றார்.
இயற்கையை பாதுகாக்க மரங்கள் நட்டு வளர்க்கும் நிலையில் இது போல் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றுவது ஏற்புடையதாக இல்லை என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர். தற்போது தாராபுரம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சர்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிக்காக இந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதா எனத் தெரியவில்லை. இது குறித்து விவரம் பெற உரிய அலுவலர்களைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் நமது மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.

