/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு ஆணைய மைதானத்தில் விளையாட தடை; வாக்குவாதம்
/
விளையாட்டு ஆணைய மைதானத்தில் விளையாட தடை; வாக்குவாதம்
விளையாட்டு ஆணைய மைதானத்தில் விளையாட தடை; வாக்குவாதம்
விளையாட்டு ஆணைய மைதானத்தில் விளையாட தடை; வாக்குவாதம்
ADDED : ஏப் 28, 2025 06:13 AM

திருப்பூர், : திருப்பூர், காலேஜ் ரோடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கம், முகப்பு பகுதியில் சிறு மைதானம் உள்ளது. கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு விளையாட திரண்டனர்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு பந்து கூடைப்பந்து மைதானத்துக்குள் வந்து விழுந்தது. அதை எடுக்க கூடைப்பந்து வலை, கம்பியை தாண்டி சிலர் குதிக்க முயற்சித்தனர்.
இதை பார்த்த விளையாட்டு அலுவலக அதிகாரிகள், 'அனைவரும் வெளியே செல்லுங்கள்; விரிவான மைதான வசதி சிக்கண்ணா கல்லுாரி பின்புறம் உள்ளது; அங்கு செல்லுங்கள்,' எனக் கூறியுள்ளனர்.
மைதானத்துக்கு வந்திருந்தவர்கள், 'விடுமுறை நாளில் விளையாட வந்திருக்கிறோம்; எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமென சொன்னால், எங்கு செல்வது? நாங்கள் இங்கு தான் விளையாடுவோம்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'அனுமதிக்க முடியாது' எனக்கூறி அங்கிருந்தவர்களை வெளியேற்றி மைதான வாயிலை மூடினர்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ''நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கூடைப்பந்து போட்டிகள் நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.
கூடைப்பந்து மைதானம் சேதமாகிறது. இடநெருக்கடி காரணமாக இம்மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் விளையாடியதால், வெளியேற்றப்பட்டனர்,' என தெரிவித்தனர்.

