
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; அரசு உதவி பெறும் பொங்கலுார் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பொங்கலுார் கிளை ஸ்டேட் பேங்க் மேலாளர் சரவணன் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. படியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் சரவணமூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தலைமை ஆசிரியர் ஜெயபாலன், பள்ளி செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

