/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
பிரன்ட்லைன் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : நவ 15, 2025 11:14 PM
திருப்பூர்: திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக காது, மூக்கு மற்றும் தொண்டை டாக்டர் பாத்திமா பேகம் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்.
மழலை செல்வங்களின் ராணுவ அணிவகுப்பு, நடனம் ஆகியவை பெற்றோரின் மனதை கவரும் வகையில் அமைந்திருந்தன. மேலும், ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், தொப்பி போடுதல், நின்ற இடத்தில் தாண்டுதல், குண்டு எறிதல், ஸ்மைலி பந்து வீசுதல் என, பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலை செல்வங்களுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பதக்கங்களை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

