/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 மாவட்ட அரசு கல்லுாரிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
/
4 மாவட்ட அரசு கல்லுாரிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
4 மாவட்ட அரசு கல்லுாரிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
4 மாவட்ட அரசு கல்லுாரிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
ADDED : நவ 04, 2025 12:46 AM
திருப்பூர்: ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்ட அரசு, பாலிடெக்னிக் என, 28 கல்லுாரிகளுக்கு, 43.80 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், உயர்கல்வித் துறையால் வழங்கப்பட உள்ளது.
உயர்கல்வித்துறை சார்பில் அரசு, பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறனை மேம்படுத்த, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 11 விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் அரசு கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 28 கல்லுாரிகளுக்கு, 59 விளையாட்டு உபகரணங்கள், 43.80 லட்சம் ரூபாயில் வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில், புலியகுளம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்துார், வால்பாறை, கோவை அரசு கலைக்கல்லுாரி, டவுன்ஹால் கல்வியியல் கல்லுாரி; அண்ணா மண்டல அறிவியல் மையம், பெண்கள் பாலிடெக்னிக், தடாகம் அரசினர் தொழில் நுட்ப கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி என கோவை மாவட்டத்தில் மொத்தம், 24 கிட்கள், 17.70 லட்சம் ரூபாயில் வழங்கப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர், தாளவாடி, மொடக்குறிச்சி, சத்தி, திட்டமலை, ஈரோடு பாலிடெக்னிக், இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கல்லுாரி என ஈரோடு மாவட்டத்தில், 11 கிட்கள், 8.70 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலுார் அரசு கல்லுாரி, நீலகிரி பாலிடெக்னிக் கல்லுாரிக்கு மொத்தம், எட்டு கிட்கள், 5.70 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், உடுமலை, அவிநாசி, பல்லடம் அரசு கல்லுாரி, சிக்கண்ணா கல்லுாரி, எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லுாரி என மொத்தம், 16 கிட்கள், 11.70 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட உள்ளது.உயர்கல்வித்துறை (விளையாட்டு பிரிவு) அதிகாரிகள் கூறுகையில், 'கல்லுாரிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கி பல ஆண்டுகளாகிறது. தற்போது புதிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதால், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவர். போட்டிகளில் பங்கேற்க இது ஊக்கமளிக்கும்,' என்றனர்.

