/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
/
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
ADDED : நவ 04, 2025 02:03 AM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சென்ற பெண் ஒருவர், திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
தீ மளமளவென எரிய, மரண ஓலமிட்டவாறு, கலெக்டர் அலுவலக வராண்டாவில் ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைவாக செயல்பட்டு, பெண்ணின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
பின், திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்தனர். இரவு, 11:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில், தீக்குளித்து இறந்தவர், உடுமலையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி கவுசல்யா, 40, என, தெரிந்தது.
வீரபாண்டி போலீசார் விசாரணையில், கவுசல்யா தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்ததும், அவர் ஏற்கனவே கொடுத்துவிட்டதால், தற்போது எதுவும் தரவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்து தீக்குளித்தாரா அல்லது கணவரின் வற்புறுத்தலால் தீக்குளித்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

