ADDED : ஆக 31, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்சலென்ஸ் பள்ளியில் 15ம் ஆண்டு விளையாட்டு விழா, 3 நாட்கள் நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் நான்கு அணியினராக பங்கேற்றனர். ஜூனியர் மற்றும் சீனியருக்கான போட்டியில் பேன்சி (பச்சை) அணி முதலிடத்தையும், பாப்பி(சிவப்பு) 2ம் இடத்தையும் பெற்றது.
பெற்றோர், தங்கள் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றதைக் கண்டு மகிழ்ந்தனர். வெற்றி பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

