/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் விளையாட்டு விழா
/
ஜெய் சாரதா பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 16, 2025 09:51 PM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, தலைமை வகித்தார். பொருளாளர் சுருதி ஹரீஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, எஸ்.டீ., எக்ஸ்போர்ட் இந்தியா நிறுவன சேர்மன் திருக்குமரன் பங்கேற்று, பேசினார்.
மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.பள்ளி முதல்வர் மணிமலர், ஆண்டறிக்கை வாசித்தார். இங்கு படித்த மாணவர் பாலாஜி, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இடம்பிடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, பள்ளி கேப்டன் முகேஷ் விஷ்ணு மற்றும் அணி தலைவர்கள் உறுதிமொழியேற்றனர்.
போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கடந்தாண்டு, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீவைஷ்ணவியின் பெற்றோர், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மாணவிக்கு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வாயிலாக, பள்ளி நிர்வாகம், 2.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது.
விழாவை ஒருங்கிணைத்த உடற்கல்வி ஆசிரியர்கள் நல்லசிவம், இளவரசன், சவுமியா, ஜெயலட்சுமி, உமா மகேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
'நுாறாண்டு திருப்பூர்' புத்தக ஆசிரியர் சுப்ரமணியன், சங்கீதா மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ் நன்றி கூறினார்.