/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு விழா
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 19, 2025 11:22 PM

திருப்பூர்: கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் இனியவேல் 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டப்போட்டியில் முதலிடம்; 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இளம்பரிதி 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் முதலிடம்,
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜட்சன் 100 மீ., 200 மீ., மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடம், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அஸ்மிதா 100 மீ, 200 மீ, உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

