/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்பிரிங் மவுன்ட் வேலி பள்ளி அறிவியல், வணிக கண்காட்சி
/
ஸ்பிரிங் மவுன்ட் வேலி பள்ளி அறிவியல், வணிக கண்காட்சி
ஸ்பிரிங் மவுன்ட் வேலி பள்ளி அறிவியல், வணிக கண்காட்சி
ஸ்பிரிங் மவுன்ட் வேலி பள்ளி அறிவியல், வணிக கண்காட்சி
ADDED : ஏப் 18, 2025 11:47 PM

திருப்பூர்: பெருந்துறை அருகே சீனாபுரத்திலுள்ள ஸ்பிரிங் மவுன்ட் வேலி பள்ளியில், இரண்டு நாள் அறிவியல் மற்றும் வணிக கண்காட்சி நடைபெற்றது.
ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். ஸ்பிரிங் மவுன்ட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் நளினி பிரபு சங்கர், கல்வி ஆலோசகர் மகாலட்சுமி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர் கைவண்ணத்தில் உருவான கைவினை பொருட்கள், விதவிதமான அணிகலன்கள், அழகு சாதன பொருட்கள், சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையிலான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
டால்ரோப், டிஜிஸ்கூல், ரேபிட் பியூச்சர் டெக்னாலஜி, ஹைமேக்ஸ் கல்வி நிறுவனங்கள், கே.பி.ஆர்., மற்றும் செங்குந்தர் பொறியியல் கல்லுாரிகளும் கண்காட்சியில் பங்கேற்றன.
கண்காட்சி நிறைவுநாளில், குருஜி வனயோகி, சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

