/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொத்தமல்லி கருகாதிருக்க தெளிப்பு நீர்ப்பாசனம்
/
கொத்தமல்லி கருகாதிருக்க தெளிப்பு நீர்ப்பாசனம்
ADDED : மார் 29, 2025 11:51 PM

பொங்கலுார்: கோடை மற்றும் மழைக்காலங்களில் கொத்தமல்லி விளைவிப்பது கடினம். இந்த இரண்டு சீசன் காலங்களிலும் விலை உச்சத்தை தொடும்.
தற்போது கோடை காலம் துவங்கி உள்ளது. வெப்பம் வாட்டி எடுப்பதால் கொத்தமல்லி செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதனால், கோடையில் நல்ல விலை கிடைக்கும். அப்போது விவசாயிகளிடம் அறுவடை செய்வதற்கு கொத்தமல்லி கீரைகள் இருக்காது.
சில விவசாயிகள் கோடை வெயிலில் இருந்து கொத்தமல்லி செடியை காப்பதற்காக தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்துள்ளனர். அதுவும் தென்னந்தோப்புகளில் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கும் பொழுது அதற்கு தேவையான ஈரப்பதமும், நிழலும் கிடைத்து விடும். கொத்தமல்லி செடிகள் வெயிலில் இருந்து தப்பும் வாய்ப்பு உள்ளது.