/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
108 பானைகளில் பொங்கலிட்ட எஸ்.ஆர்., நகர் மக்கள்
/
108 பானைகளில் பொங்கலிட்ட எஸ்.ஆர்., நகர் மக்கள்
ADDED : ஜன 27, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் எஸ்.ஆர்., நகர் தெற்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நேற்று, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, மாலை, 4:25 மணிக்கு, பாரதியார் வீதியில், 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, ரத்தின விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச்சென்று, பொது வழிபாடு நடந்தது.
அதனை தொடர்ந்து, அருணாச்சலம் குழுவின் பவளக்கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பில், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. எஸ்.ஆர்., நகர் பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

