/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ அழகர் பெருமாள் படைக்கலம் திருவிழா
/
ஸ்ரீ அழகர் பெருமாள் படைக்கலம் திருவிழா
ADDED : அக் 06, 2024 04:46 AM

அவிநாசி : அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகர் பெருமாள் சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு படைக்கலம் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு சென்று சுவாமி இறங்குதல் வேண்டுதலை நிறைவேற்றினார். தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் திருக்கல்யாணம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று கவ்வாளம், சேவையாட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகர் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை தொடர்ந்து, ஏழு முதன்மை கமிட்டி தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.