/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டல பூஜை நிறைவு
/
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED : அக் 06, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த கோவிலில்,கடந்த மாதம், 11ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தினமும், மதியம், 12:00 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
மண்டல பூஜைநிறைவு நாளான நேற்று காலை விக்னேஸ்வர் பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, 16 திரவியங்களில் அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.