/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 08, 2025 12:41 AM

திருப்பூர்; திருப்பூர், குத்துாஸ்புரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா மற்றும் பெரியவழிபாடு எனப்படும் 'தொட்டப்ப' பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி முதல்கால வேள்வி பூஜை துவங்கியது. பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, மகா கும்பாபிேஷகம் நடந்தது.
ராமலிங்கேஸ்வரர், ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில், காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து, ஆறுவகை அம்மன் வேடங்களுடன், தீப்பந்தத்தில் கரகாட்டம், ஜெய்பவானி வீரக்குமாரர்கள், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் வீரக்குமாரர்கள் அலகு சேவை நடந்தது. சாவக்கட்டுப்பாளையம் சிம்மவாஹினி வீரக்குமாரர்கள் அலகுசேவை, சென்டை மேளத்துடன், மஹா சக்தி அழைப்பு பூஜைகள் கோலாகலமாக நடந்தது.
இரவு, 9:00 மணிக்கு, அச்சு வெல்லக்கோட்டையில், அழகு பந்தலில், வெற்றிலை தோரணத்துடன், மஹா சக்தி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஹா சாமுண்டி அழைப்பு நிகழ்ச்சியும், மஹா ஜோதி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

