/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுருசர்வா அகாடமி 9 பேர் சி.ஏ., தேர்ச்சி
/
ஸ்ரீகுருசர்வா அகாடமி 9 பேர் சி.ஏ., தேர்ச்சி
ADDED : டிச 30, 2024 01:13 AM
திருப்பூர்; கடந்த மே 24ல் நடந்த சி.ஏ., இறுதித்தேர்வில் தேர்ச்சியடைந்த காவியா, மோனாலிசா, கீர்த்தனா, காயத்ரி; நவ., 24ல் நடந்த சி.ஏ., இறுதித்தேர்வில் தேர்ச்சியடைந்த முத்துலட்சுமி, ஜனபிரியங்கா, சந்தோஷ், சதீஷ், ஹரிணிதேவி ஆகிய ஒன்பது பேர், திருப்பூர், ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமியில் பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் படிப்பில் முழு நேர பயிற்சி வகுப்புகளை முடித்தவர்கள்.
மாணவி முத்துலட்சுமி, முதல் முயற்சியிலேயே பவுண்டேஷன், இன்டர், பைனல் ஆகிய மூன்று தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். இவர்களுக்கு அகாடமியில் பாராட்டு விழா நடந்தது. 'இங்கு படித்த மாணவர்கள் தேசிய அளவில் சாதித்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜேஷ் என்ற மாணவர், இன்டர்மீடியட் தேர்வில் தேசிய அளவில் 23வது இடம் பிடித்தார். இப்போது சி.ஏ., பவுண்டேஷன், இன்டர்மீடியட் வகுப்புக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. பிளஸ் 2 மற்றும் கல்லுாரி இறுதியாண்டு படிப்போரும் பதிவு செய்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு: 96009 22888.

