ADDED : ஆக 10, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா வழிபாடு நடந்தது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 91வது ஜெயந்தி விழாவையொட்டி, காலேஜ் ரோடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில் வேதபாராயணம் நடந்தது. மாலை, 6:30 மணி முதல், கோவை வெள்ளலுார் வேதபாடசாலை வித்யார்த்திகளின், வேதபாராயணம் நடந்தது.
சுவாமிகளின் சிலை மற்றும் பாதுகைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வித்யார்த்திகளும், பக்தர்களும் வழிபட்டனர்.