/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுங்கும மாரியம்மன் பொங்கல் விழா
/
ஸ்ரீகுங்கும மாரியம்மன் பொங்கல் விழா
ADDED : மே 18, 2025 11:14 PM

திருப்பூர்,; திருப்பூர், ெஷரீப் காலனி ஸ்ரீகுங்கும மாரியம்மன் கோவில், 19ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா 14ம் தேதி துவங்கியது.
நேற்று இரவு, 11:00 மணிக்கு சக்தி பூஜை மற்றும் மினி விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சிறப்பு அபிேஷகமும், கும்பம் மற்றும் கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை காலை விநாயகர் பொங்கலும், மாலை பூவோடு ஊர்வலமும், 21ம் தேதி குங்கும மாரியம்மன் பொங்கல் விழாவும், 22ம் தேதி மஞ்சள் நீர் விழா, சுவாமி ஊர்வலமும், வெள்ளிக்கிழமை அன்னதானமும் நடக்கிறது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், நேற்று ஆதிபராசக்தி அலங்கார பூஜையும் நடந்தன.
இன்று, ராஜராஜேஸ்வரி அலங்காரம், 20ம் தேதி காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரம், 21ல் சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், 22ம் தேதி ஸ்ரீகாதம்பரி அலங்காரமும், 23ம் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெற உள்ளது.