/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் திருவிழா
/
ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் திருவிழா
ADDED : ஜன 02, 2025 06:14 AM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசிக்கவுண்டம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடந்து வருகிறது. இந்தாண்டு, 15ம் தேதி மார்கழி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு, கருப்பராயன், பொட்டுசாமி பொங்கல், விநாயகர் பொங்கல் விழாவும் நடந்தது. டிச., 30ம் தேதி அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மன் அபிேஷக பூஜையும் நடந்தது.
நேற்று முன்தினம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், படைக்கலமும் நடந்தது. நேற்று, மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா, உச்சிகால பூஜையும் விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, திரளான பெண்கள், கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு, 10:00 மணிக்கு, கும்பம், கங்கையில் விடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், இன்று மதியம் மஞ்சள்நீர் பூஜையும், மாலை இசை நிகழ்ச்சியும், நாளை, மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
l திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், 61வது பொங்கல் திருவிழா, 29ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அம்மை அழைத்தல், தொடர்ந்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை பூவோடு எடுத்தல், இரவு கும்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாலை மஞ்சள் நீராடுதல், நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தார்.