ADDED : ஜன 09, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி, முருகம்பாளையம் மாகாளியம்மன் பொங்கல் விழா நேற்று கோாலகலமாக நடந்தது; பெண்கள், வாணவேடிக்கை, மேளதாளத்துடன், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
அவிநாசி, வஞ்சிபாளையம் அடுத்துள்ள முருகம்பாளையம் மாகாளியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் பொட்டுசாமி பூஜையுடன் துவங்கியது.
நேற்று, மாலை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் மாவிளக்கு, அம்மன் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று அம்மனை வழிபட்டனர். இன்று காலை முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட உள்ளனர்.