/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆயக்கால் பூஜை
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆயக்கால் பூஜை
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆயக்கால் பூஜை
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆயக்கால் பூஜை
ADDED : ஜூலை 10, 2025 11:21 PM

அவிநாசி; முருகம்பாளையம், ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, ஆயக்கால் முகூர்த்த பூஜை நடைபெற்றது.
அவிநாசி அருகே வஞ்சிபாளையம் - முருகம்பாளையத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், ஆக., 28ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவக்குமார் தலைமையில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர், விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் முன்னிலையில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான முகூர்த்த ஆயக்கால் நடும் விழா நடைபெற்றது.
விழா குழுவினர் கூறியதாவது:
ஆக., 28ம் தேதி பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், அவிநாசி திருப்புகொளியூர் ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமி, கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், பெங்களூரூ வாழும் கலை குருகுல வேத ஆகம பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் தலைமையில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள், ஆக., 26ம் தேதி முதலாம் கால பூஜை துவங்கி யாக சாலைகள் நடைபெறுகிறது. அதில், காலை, 6.45 மணிக்கு கிழக்கு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், 7.45 மணிக்கு எல்லை பிள்ளையார் என அழைக்கப்படும் அற்புத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை, 9:15 மணிக்கு மேற்கு பிள்ளையார் கோபுரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோபுரம் கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு ஸ்ரீ விநாயகப் பெருமான் கும்பாபிஷேகம் மற்றும் காலை 10:00 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி, பிரம்மாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெறும். கும்பாபிேஷக விழாவையொட்டி, சிறப்பான அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.