/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம்: அகல் விளக்கு தட்டு வினியோகம்
/
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம்: அகல் விளக்கு தட்டு வினியோகம்
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம்: அகல் விளக்கு தட்டு வினியோகம்
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம்: அகல் விளக்கு தட்டு வினியோகம்
ADDED : ஜன 20, 2024 02:17 AM

திருப்பூர்:அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக நாளில், விளக்கு ஏற்றி வைத்து வழிபட ஏதுவாக, அகல் விளக்குகள் மற்றும் எவர்சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
வரும், 22ம் தேதி அயோத்தியில், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளதால், அன்றயை தினம், தீபம் ஏற்றி வைத்து, ராமரை வழிபட வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர். அதற்காக ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், வீடு வீடாக சென்று, ராமர் கோவில் படம் மற்றும் அட்சதை வழங்கி வருகின்றனர்.
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் தொடர்பான முத்திரை பதிக்கப்பட்ட, சிறிய எவர்சில்வர் தட்டு, ஐந்து மண் அகல் விளக்கு, திரி பாக்கெட், சிறிய நல்லெண்ணெய் பாட்டில் மற்றும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் படம் சிறிய நோட்டீசுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல, திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆன்மிக குழுவினர், வீடு வீடாக சென்று, அட்சதை மற்றும் ராமர் படம் வழங்கி வருகின்றனர்.